சீரியல் ரசிகர்கள் மத்தியில் சன்டிவி சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை முதல் இரவு வரை சன்டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில். ப்ரைம் டைமான மாலை 6 மணி முதல் 9 மணி வரை வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
அந்த வகையில் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குடும்ப கதைதான் என்றாலும் கூட பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த சீரியலில். அடுத்து நாயகி மீரா கர்ப்பமாக இருப்பதுபோல் காட்சிகள் வரவுள்ள நிலையில். அடுத்து சில அதிரடி திருப்பங்கள் அரங்கேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணான கண்ணே சீரியலில் அடுத்து முக்கிய கேரக்டர் ஒன்று இறந்துவிடுவதுபோல காட்சிகள் வர அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பான காட்சிகள் படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்ணான கண்ணே சீரியலில் யாருக்கு என்ன நடக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.