வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஏற்பட்டு வந்த நிலையில் 10 ரூபாய் நாணயத்தை வைத்துள்ள வணிகர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்று பல முறை விளக்கம் அளித்து உள்ளது. இருப்பினும் வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, தற்போது வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு டிபன் கடையில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், இங்கு 10 ரூபாய் நாணயங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை போன்றே வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.