ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்பட ஒருசில விடுமுறை தினங்கள் வருவதால் கூடுதலாக விடுமுறை நாட்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பத்து நாட்களும் ஒரு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் 15 நாட்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? இல்லையென்றால் இந்த 5 பிரச்சனைகள் ஏற்படும்!
வங்கி விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு மாதமும் வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே வங்கிகளில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடுவது நல்லது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
10 நாட்கள்
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறையாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 10 நாட்கள் மட்டுமே வங்கி விடுமுறையாக உள்ளது. நான்கு ஞ்ஜ்யிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் என மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அதுமட்டுமின்றி மொஹரம் தினம், விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் மற்றும் ஜென்மாஷ்டமி என நான்கு நாட்கள் கூடுதல் விடுமுறை என்பதால் மொத்தம் 10 நாட்கள் ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருசில மாநிலங்களில் 15 நாட்கள்
ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாநிலங்களில் உள்ளூர் திருவிழாக்களை கருத்தில் கொண்டு உள்ளூர் விடுமுறையாக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒருசில மாநிலங்களில் 15 நாட்கள் வங்கி விடுமுறையாக உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த முழு விபரங்கள் இதோ:
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை தினங்கள்
ஆகஸ்ட் 1 துருபகா ஷீ-ஜி திருவிழா (காங்டாக்)
ஆகஸ்ட் 7 – ஞாயிறு விடுமுறை
ஆகஸ்ட் 8 – முஹர்ரம் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
ஆகஸ்ட் 9 – சண்டிகர், கவுகாத்தி, இம்பால், டேராடூன், சிம்லா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், ஜம்மு, பனாஜி, ஷில்லாங் தவிர நாடு முழுவதும் விடுமுறை.
ஆகஸ்ட் 11 – ரக்ஷாபந்தன்
ஆகஸ்ட் 13 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 14 -ஞாயிறு விடுமுறை.
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் விடுமுறை
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு (மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை)
ஆகஸ்ட் 18 – ஜென்மாஷ்டமி விடுமுறை
ஆகஸ்ட் 21 -ஞாயிறு விடுமுறை.
ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை
ஆகஸ்ட் 28 – ஞாயிறு விடுமுறை.
ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ் ,சத்தீஸ்கர் மற்றும் சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 31 – விநாயக சதுர்த்தி விடுமுறை
நாடு முழுவதும் விடுமுறை
மேற்கண்ட 15 நாட்கள் வங்கி விடுமுறையில் 10 நாட்கள் நாடு முழுவதும் வங்கி விடுமுறை என்பதும், 5 நாட்கள் ஒருசில மாநிலங்களில் மட்டும் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
List of Bank Holidays in August 2022. Details here…
List of Bank Holidays in August 2022. Details here… | ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாள் விடுமுறையா? முழு விபரங்கள்!