புதுடெல்லி: ‘வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படாது’ என ஒன்றிய வருவாய் செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2021-22ம் நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இது குறித்து ஒன்றிய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:என மக்கள் நினைக்கின்றனர். அதனால், ஆரம்ப நாட்களில் ரிட்டன் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால், தற்போது, தினசரி 15 லட்சம் முதல் 18 லட்சம் பேர் வரை ரிட்டன் தாக்கல் செய்கிறார்கள். கடந்த ஆண்டு கடைசி நாளில் 10 சதவீதம் பேர் (சுமார் 50 லட்சம் பேர்) ரிட்டன் தாக்கல் செய்தனர். இம்முறை 1 கோடி பேர் வரை கடைசி நாளில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். அப்படி செய்தாலும், வருமான வரித்துறையின் புதிய இணையதளம் மிக விரைவாக இயங்கும். இதனால், இந்த ஆண்டு ரிட்டன் தாக்கல் தேதி நீட்டிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார். கெடு முடிந்து ரிட்டன் தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.