இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதித்து வருகிறது என்பதும் அதேபோல் மோசமாக செயல்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நான்கு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபாசிட் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஆபீஸ்-க்கு வர முடியாது, அதுவும் 5 நாளெல்லாம் ரொம்ப ஓவர்.. ஐடி ஊழியர்கள் பதில்..!
நான்கு கூட்டுறவு வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ஒருசில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி (மேற்கு வங்கம்) மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பணம் எடுக்க கட்டுப்பாடுகள்
இந்த நான்கு வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அதேபோல் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50,000 பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில், ஒரு வாடிக்கையாளருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் தொடரும்
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன்படி ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த வங்கிகளின் செயல்முறைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என தெரிகிறது.
ரூ.57.75 லட்சம் அபராதம்
மேலும் கூட்டுறவு வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப்ஐக்கள் மூலம் மோசடிகள் வகைப்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல்’ தொடர்பான விதிகளை மீறியதற்காக சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கு ரூ.57.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
RBI imposes restrictions, withdrawal caps on 4 Co-op banks!
RBI imposes restrictions, withdrawal caps on 4 Co-op banks! | 4 வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் மட்டும் அபராதம்: ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை