வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி! நடிகர் சூர்யா

சென்னை: மத்தியஅரசின் 68வது தேசிய விருதுகள்  நேற்று (22ந்தேதி) அறிவிக்கப்பட்டன. 2020ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப் படங்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி.பிரகாஷ்குமார், சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதை என மொத்தம் 5 விருதுகளை அள்ளியது.

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று படத்துக்கும், அதில் நடித்த நடிகர் சூர்யா சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டதற்கும் அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும் அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி – சூர்யா என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.