பொதுப் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படும் வளங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொதுப் பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார்.

“தரத்தில் உயரத்தை அடையம் போது நீங்கள் மேலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
திருகோணமலையிலுள்ள கடற்படையின் பெருமைமிகு கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் (NMA) பயிற்சிகளை முடித்துக் கொண்டு கடற்படையின் கொமிஷன் அதிகாரிகளாக வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

புதிதாக வெளியேறும் இளம் அதிகாரிகளிடம் மேலும் உரையாற்றிய அவர், ” உங்களிடம் ஒப்படைத்துள்ள வளங்களை சரியான முறையில் உபயோகித்து அதன் இலக்குகளை அடைய நீங்கள் உறுதிபூண வேண்டும் ” என்று கூறினார்.

திருகோணமலை துறைமுக நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கடற்படையின் உயர் கல்வி மற்றும் பயிற்சிக்கான கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலைக்கு வந்தடைந்த ஜெனரல் குணரத்னவை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கலாசாலையின் கட்டளை தளபதி கொமடோர் டாமியன் பெர்னாண்டோ ஆகியோர் வரவேற்றனர். பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர், பிரதம அதிதிக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக சம்பிரதாய ரீதியிலான கௌரவ மரியாதை வழங்கப்பட்டது. இந்த கவர்ச்சிகரமான இரவுநேர வெளியேறும் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது 36 இளம் அதிகாரிகள் பயிற்சியை முடித்து வெளியேறிச் சென்றனர்.

கடற்படை மரபுகளுக்கு இணங்க நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோரின் மற்றும் விருந்தினர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் மற்றொரு கடற்படை அதிகாரிகள் குழு பயிற்சியை முடித்து வெளியேறியது.

இவ் அதிகாரிகள் குழு, ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 35வது (தொழில்நுட்ப) உள்வாங்களின் 11 மிட்ஷிப்மேன் அதிகாரிகளையும், 36வது உள்வாங்களின் 25 மிட்ஷிப்மேன் அதிகாரிகளையும் உள்ளடக்கியது.

பயிற்சியின் போது திறமைகாட்டிய மிட்ஷிப்மேன் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளரால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

இதன்படி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது உள்வாங்களின் சிறந்த தொழில்நுட்ப அதிகாரியாக மிட்ஷிப்மேன் HASV ஹப்புஆராச்சி தெரிவு செய்யப்பட்டார்.

இன் 36வது உள்வாங்களின் மிட்ஷிப்மேன் IS வீரசிங்க சிறந்த மிட்ஷிப்மேன் என்ற விருதையும், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் வென்றார்.

மிட்ஷிப்மேன் SN. அபேவர்ண தொழில்முறை மற்றும் ஒட்டுமொத்த பாடங்கள் அதிக மதிப்பெண் பெற்றதற்காக இரண்டு விருதுகளைப் பெற்றார். 36வது உள்வாங்களின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதை மிட்ஷிப்மேன் RPPS ராஜபக்ஷ வென்றார்.

வழக்கமாக, மிட்ஷிப்மென் தர அதிகாரிகள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, பிரதி உப லெப்டினட்களாக தரமுயர்த்தப்படுவார்கள், மேலும் முப்படை தளபதியின் அனுமதிபெற்ற அதிகாரி ஒருவரினால் அதிகார வாள்களும் வழங்கி வைக்கப்படும்.
“தேசத்தின் மீதான உங்கள் விசுவாசம் ஒருபோதும் கேள்விக்குட்படுத்தப்பட க்கூடாது, மேலும் சிவில் மற்றும் கடற்படை சட்டத்திற்கு கீழ்ப்படிந்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதித்து செயலாற்றுவது கட்டாயமாகும் ” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தத்தின் போது கடற்படையின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்களின் முன்னோர்களின் சிறப்பை நிலைநிறுத்தக்கூடியவாறு சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்திய, அதேவேளை தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடு எதிர்கொள்ளும் பாரம்பரியமற்ற சவால்களான ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பிற நாடுகடந்த குற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற பல அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கும் செயலாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மகா சங்கத்தினர் உட்பட சமயப் பெருமக்கள். கிழக்கு மாகாண சிரேஷ்ட அரச அதிகாரிகள், கடற்படை பிரதம அதிகாரி, வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மற்றும் வெளியேறும் அதிகாரிகளின் உறவினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

Media Centre – MOD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.