காலி முகத்திடல் சம்பவம் குறித்து பொலிஸ் அறிக்கை

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டுமாயின் அரசியலமைப்பு மூலம் பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அடையாங்கண்டு சட்டரீதியாகவும் அமைதியான முறையிலும் ஆர்ப்பாட்ங்களில் ஈடுபடுமாறு பொலிஸார் 21 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக 21 ஆம்திகதி அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குறித்த விசேட அறிவிக்கையை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

காலிமுகத்திலில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் பொலிஜ் தலைமையகம் நீண்ட அறி;க்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ,ஜனாதிபதி செயலகத்தின் பெறுமதிமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டியதை கவனத்தில் கொண்டும் வேறு மாற்று வழி இல்லாத காரணத்தினாலுமே நேற்று முனதினம் (21) ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பின் மூலம் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் மட்டுப்படுத்தலை கவனத்திற்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும் பொலிசாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது . அச்சுறுத்தல்களை விடுத்தல்இ அழுத்தங்களை பிரயோகித்தல்இ வன்முறை அல்லது கலகங்களை மேற்கொண்டு அமைதி மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தல்இ துன்புறுத்தும் வகையில் செயற்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அதே வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீசாருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தி அவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பொலிஸ் ஊடகப்பிரிவு அது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

Pol 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.