இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 18ஆந் திகதி அட்டெரிட்ஜ்வில்லில் உள்ள லெரடோங் ஹொஸ்பிஸில் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் தலைமையில் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது.

உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன பல இராஜதந்திரிகளுடன் இணைந்து 18 நோய்வாய்ப்பட்ட நோயாளர் விடுதியின் ஊழியர்களுக்கு தன்னார்வ சேவைகளை வழங்குவதில் நேரத்தை செலவிட்டார். மேலும், இலங்கையின் சார்பாக சிலோன் தேயிலை மற்றும் நோயாளிகளுக்கான கழிப்பறைப் பொருட்களையும் வழங்கினார்.

ஐ.நா. பொதுச் சபையால் (ஐ.நா. தீர்மானம் யுஃசுநுளுஃ64ஃ13) 2009 இல் நிறுவப்பட்ட நெல்சன் மண்டேலா சர்வதேச தினம், மோதலைத் தீர்த்தல், இன உறவுகள், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பாலின சமத்துவம், குழந்தைகள் மற்றும் ஏனைய பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள், வறுமைக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மனிதகுலத்தின் சேவைக்கான முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக நிறுவப்பட்டது. இது ஆண்டுதோறும் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 அன்று கொண்டாடப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவளிக்க அல்லது அவர்களின் உள்ளூர் சமூகத்தில் சேவை செய்ய குறைந்தபட்சம் 67 நிமிடங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையில், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் திணைக்களம் (இலங்கையில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு சமமானது) 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தின நிகழ்வுகளை வழிநடாத்தியதுடன், குறித்த 67 நிமிடங்கள் மனித உரிமைகள் மற்றும் நிறவெறி ஒழிப்புக்காக முன்னாள் ஜனாதிபதி போராடிய ஆண்டுகளின் எண்ணிக்கையை அடையாளப்படுத்துகின்றது.

நெல்சன் மண்டேலாவின் மேற்கோளான, ‘உங்களிடம் இருப்பதைக் கொண்டு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்’ என்பது 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தின் கருப்பொருளாகும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
பிரிட்டோரியா
2022 ஜூலை 22

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.