4வது முறை நம்பிக்கையில்லா தீர்மானம் – பிரதமர் வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பிரயுத் இன்று நடைபெற்ற நான்காவது நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றார்.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து நாட்டில், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. பிரதமராக பிரயுத் சான் ஓச்சா (68) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் பிரயுத் தலைமையிலான ஆட்சியில் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடந்த 4 நாட்களாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து, பிரதமர் பிரயுத் சான் – ஓச்சா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது.

வங்கியிலிருந்து பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை – சீன அரசு உத்தரவால் மக்கள் அவதி!

மொத்தம் உள்ள 471 வாக்குகளில், பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவுக்கு ஆதரவாக, 256 எம்பிகள் வாக்கு அளித்தனர். இவருக்கு எதிராக 206 எம்பிக்கள் வாக்களித்த நிலையில், 9 பேர் வாக்களிக்க வரவில்லை. பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து இதுவரை நான்கு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிரதமர் பிரயுத் சான் ஓச்சா எதிர்கொண்டுள்ளார். இதில் அனைத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிரயுத், 2014 ஆம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பின் போது அதிகாரத்திற்கு வந்தவர். அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து வரும் பிரயுத் மீது, அரசியல் எதிரிகளை பெகாசஸ் மென்பொருள் வழியே உளவு பார்த்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.