முதுகலை மருத்துவ படிப்பு; செப்டம்பர் 1ல் கலந்தாய்வு: சட்ட விதிமுறைகளில் திருத்தம்

புதுடெல்லி: நீட் நுழைவு தேர்வுக்கான முதுகலை மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 1ம் தேதி அறிவிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நுழைவு தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து ஒன்றிய பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள்  மற்றும் 50 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 50 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஒரே நேரத்தில் தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.நீட் முதுகலை நுழைவு தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், இந்த கலந்தாய்வின்போது தங்களின் மருத்துவ பிரிவு, கல்லூரிகளை தேர்வு செய்வார்கள். மருத்துவ கலந்தாய்வு குழு, ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வை நடத்துகிறது. 2021ம் கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கலந்தாய்வில் 748 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எனவே, கட் ஆப் மதிப்பெண்கள் இல்லாமல் சிறப்பு கலந்தாய்வு சுற்றை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.