இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லைப் பகுதியான குருங் குமே மாவட்டத்தில் எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) புதிதாக சாலை அமைக்கிறது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்ரீத் பண்டிகை கொண்டாட கடந்த 5-ம் தேதி தொழிலாளர்கள் 19 பேர் சொந்த ஊருக்கு நடைபயணமாக புறப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் அவர்கள் காணாமல் போயினர். சில நாட்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 18 பேரை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இதன்பலனாக நேற்று 7 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.