தெருநாய்க்களிடம் இருந்து ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சேவல் ஒன்று உயிர் நீத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. இதனையடுத்து ஒரு கிராமமே ஒன்றிணைந்து அந்த சேவலுக்கு இறுதிச்சடங்கு நடத்தியிருக்கிறது.
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஃபட்னாபுர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெஹ்தாவுள் காலா என்ற கிராமத்தில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு சேவல் ஒன்று இறந்திருக்கிறது. லாலி என்ற பெயரிடப்பட்ட அந்த சேவலுக்கு ஒரு கிராமத்தின் 500 பேர் சேர்ந்து தேராவின் என்ற இறுதிச்சடங்கை செய்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக பேசியுள்ள சேவலின் உரிமையாளரான மருத்துவர் சல்க்ராம் சரோஜ், தனது வீட்டின் தோட்டத்தில் கடந்த ஜூலை 7 அன்று ஆட்டுக்குட்டி ஒன்றினை கட்டிவைத்திருந்திருக்கிறார்.
வீட்டின் முன்புறம் சரோஜ் தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் பின்புறத்தில் இருந்தே சத்தம் கேட்டதை அடுத்து சென்று பார்த்திருக்கிறார்கள்.
அங்கு தெருநாய்கள் சரோஜின் தோட்டத்திற்குள் நுழைந்து ஆட்டுக்குட்டியை தாக்க முயற்சித்திருக்கின்றன. அப்போது சேவல் லாலி குதித்துச் சென்று நாயுடன் சண்டையிட்டு ஆட்டுக்குட்டியை காப்பாற்றியிருக்கிறது. மேலும் அந்த நாய்களை லாலி துரத்தியும் சென்றிருக்கிறது.
ALSO READ:
”இப்போதிருந்தே மனிதத்தை போற்றலாமே” – வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுக்கொடுக்கும் சிறார்கள்!
இதில் லாலியை அந்த தெரு நாய்கள் தாக்கியதால் அந்த சேவல் கடுமையான காயத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் அடுத்த நாளே லாலி சேவல் உயிரிழந்திருக்கிறது எனக் கூறியுள்ளார். அதனையடுத்து, உயிரிழந்த லாலியை சரோஜ் தனதுக்கு வீட்டுக்கு பக்கத்திலேயே புதைத்து அதற்கான சடங்குகளையும் செய்திருக்கிறார்.
இதுபோக லாலி சேவலுக்கு தேராவின் என்ற சடங்கையும் நடத்தும்படி சரோஜ் கூறியதற்கு அவரது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டு நடத்தியிருக்கிறார்கள். இதில்தான் அந்த கிராம மக்களே பங்கேற்றிருந்திருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியை காப்பாற்ற போய் சேவல் தன்னுடைய உயிரை விட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM