இந்தியாவில் சக நடிகையுடன் காரில் சென்று கொண்டிருந்த கணவரை மனைவி அடித்து வெளுத்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஒடிசா திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரக்ருதி மிஸ்ரா, சமீபத்தில் பிரேமம் என்ற படத்தில் நடிகர் தன்மெ மொஹந்தியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் இருவரும் புபனேஷ்வர் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் காரை மடக்கிய தன்மெ மொஹந்தியின் மனைவி, இருவரையும் நடுரோட்டில் அடிக்கத் தொடங்கினர்.
இதனால் அவமானமடைந்த மிஸ்ரா, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்த பலர், சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலாகிவருகிறது.
பிரேமம் படம் நடித்த பின்னர் மிஸ்ராவுக்கும், மொஹந்திக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருப்பதாக அவர் மனைவி குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை மிஸ்ராவின் தாயார் போலிசில் புகார் அளிக்க விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தானும், மொஹந்தியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்றும், தற்போது நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனவும் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.