வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி அசோலா வனவிலங்கு சரணாலயத்தில், முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சியை போலீஸ் மூலம் கைப்பற்றிய மத்திய அரசு, அங்கு பிரதமர் மோடியின் படத்தை வைத்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், நிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்திற்கு வந்த போலீசார், அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மீது மோடியின் படத்தை ஒட்டினர். நிகழ்ச்சியை தடுக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது.
பிரதமர் படத்தை யாரும் தொடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம் ஆத்மி அரசுக்கு சொந்தமான பேனர்கள் கிழிக்கப்பட்டன. இது கெஜ்ரிவால் அரசின் நிகழ்ச்சி. இப்போது மோடி அரசின் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் மோடி பயப்படுகிறார் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் அவரும், நானும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளோம். எங்களின் அரசை இழிவுபடுத்துவே இது போன்ற முயற்சிகள் நடக்கின்றன. ஒரு அற்பமான குற்றச்சாட்டுக்கு சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். தற்போது மணிஷ் சிசோடியாவை கைது செய்ய முயற்சி நடக்கிறது. பொது மக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, டில்லி துணை நிலை கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், உடல்நலக்குறைவால் கெஜ்ரிவால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement