கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகை அர்பிதா முகர்ஜியை 1 நாள் காவலில் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது. நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.21 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பல கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.