Xiaomi 11T Pro Amazon Prime day sale 2022 offer: சியோமி 11டி ப்ரோ எனும் பிரீமியம் ஸ்மார்ட்போன் அமேசான் சலுகை தின விற்பனையில் நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஜூலை 24ஆம் தேதியான இன்று மட்டுமே இந்த சலுகை பயனர்களுக்குக் கிடைக்கும்.
போனில் 120Hz அமோலெட் டிஸ்ப்ளே, 120W சார்ஜிங், 108 மெகாபிக்சல் கேமரா போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் ரூ.20,000 வரை சலுகைகளை வழங்குகிறது.
மலிவு விலையில் அமோலெட் டிஸ்ப்ளே உடன் Zebronics Iconic Smartwatch 3 அறிமுகம்!
சியோமி 11டி ப்ரோ 5ஜி சலுகை விலை (Xiaomi 11T Pro 5G Offer Price)
இந்த சிறப்புமிக்க ஸ்மார்ட்போனுக்கு அமேசான் இந்தியா சலுகை அறிவித்துள்ளது. அதன்படி போனானது ரூ.10,000 வரை தள்ளுபடியை பெறுகிறது. போனில் அடிப்படை விலை 49,999 ரூபாயாகும். ஆனால், தற்போது போனின் 8GB+128GB வேரியன்டின் விலை ரூ.35,999 ஆக அமேசான் பிரைம் டே சலுகை தினத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், கூடுதலாக அமேசான் ரூ.5,000 கேஷ்பேக் வழங்குகிறது. நேரடி கேஷ்பேக் என்பதால் வங்கி சலுகைகள் இல்லாமல் இதனை பயனர்கள் அனுபவிக்க முடியும். இப்போது போனின் விலை ரூ.30,999 ஆக இருக்கும்.
மேலதிக செய்தி:
Prime Day 2022: ஸ்மார்ட் வாட்டர் ஹீட்டர்களுக்கு 60% வரை தள்ளுபடி!
ஆனால், எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி போன் வாங்கினால், கூடுதலாக ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது, அனைத்து அம்சங்களும் அடங்கிய இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை வெறும் ரூ.29,999 என்ற விலையில் நீங்கள் வாங்க முடியும். இந்த சலுகை ஜூலை 24ஆம் தேதியான இன்று மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சியோமி 11டி ப்ரோ 5ஜி அம்சங்கள் (Xiaomi 11T Pro 5G Specs)
சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி புராசஸர், 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.
கேமராவைப் பொருத்தவரை 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 மெகாபிக்சல் 2x டெலிமேக்ரோ கேமரா ஆகிவவை கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி எடுக்க 20 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட கேமரா நிறுவப்பட்டுள்ளது.
டால்பி அட்மாஸ் திறன் கொண்ட இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பொழுதுபோக்கிற்கு வழிவகுக்கிறது. ஜேபிஎல் ஒலி அமைப்பு ஆதரவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி, வைஃபை6, ப்ளூடூத் 5.2 ஆகிய இணைப்பு ஆதரவுகளும் உள்ளன.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சியோமி 11டி ப்ரோ 5000mAh டூயல் செல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு சியோமி 11டி ப்ரோ (Xiaomi 11T Pro) ஸ்மார்ட்போனை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. புதிய சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB என மூன்று வகைகளில் கிடைக்கிறது.