வெளியானது ஜெய்யின் எண்ணித்துணிக டிரைலர்
ஜெய்யின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் எண்ணித்துணிக. ஆகஸ்ட் 4ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ஜெய்யுடன் அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, வெற்றி செல்வன் என்பவர் இயக்கி இருக்கிறார். அதிரடியான ஆக்சன் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ ஜெய்க்கும் வில்லனுக்குமிடையே இடையே நடக்கும் முக்கிய போர்தான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளது.
தமிழ்நாடே அலற மாதிரி ஒரு சம்பவத்தை பண்ண போறேன் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டிரைலரில் ஆக்சன் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி காட்டி இருக்கிறார் ஜெய். அதனால் ஜெய் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதை இந்த எண்ணித்துணிக படத்தின் டிரைலர் வெளிப்படுத்துகிறது.