பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில், நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் கூறியதால் அவருக்கு எதிராக நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருவதால் சர்ச்சையாகி உள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சமந்தாவுடன் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் நடிகர் அக்ஷய்குமார் சமந்தாவை அலேக்காக தூக்கி செல்வது போன்ற காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றி எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
இந்த நிலையில், சமந்த கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என்று கூறியிருப்பது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கரண் ஜோஹர் நடிகை சமந்தாவிடம் “தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை ?’ என்று நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதிலளித்த சமந்தா, “இப்போதுதான் நயன்தாராவுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தேன்” என்றார். அவருடைய இந்த பதில் மூலம் நயன்தாரா தான் முன்னணி நடிகை என்று சமந்தா குறிப்பிட்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கரண் ஜோஹர், ‘என் லிஸ்டில் அப்படி இல்லையே?’ என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, நயன்தாரா ரசிகர்கள், கரண் ஜோஹருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரண் ஜோஹர் நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என்று கூறியிருப்பது நயன்தாரா ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”