ராம்நாத் கோவிந்த் ஆற்றிய கடைசி உரை… உருக்கமாக பேசியது என்ன?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் இன்றுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. இதனையடுத்து, நாட்டு மக்களுக்கு அவர் குடியரசுத் தலைவராக இறுதி உரையாற்றினார். உருக்கமான அவரது உரையின் சாரம்சம்:

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றும் அளவுக்கு உயர்ந்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். இதற்காக, நம் நா்ட்டின் ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன்.

நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயரிய பொறுப்பு எனக்கு கிடைக்க காரணமான உங்களுக்கும் (மக்கள்), எம்பி, எம்எல்ஏக்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்ற நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், கான்பூரில் நான் படித்த பள்ளியில் எனக்கு பாடங்கள் போதித்த ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றதும் ன் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

தங்களது கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களது பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

எந்தவித பேதமும் இல்லாமல், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றும் விதத்தில் நாடு தயாராகி வருகிறது என்பதை உளப்பூர்வாக, உறுதியாக நம்புகிறேன் என்று ராம்நாத் கோவிந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவதையடுத்து, நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நாளை (ஜூலை 25) பதவியேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.