திருச்சியில் விரைவில் சித்தா மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் – கே.என் நேரு தகவல்

KN Nehru says Siddha and Dental medical colleges will starts soon in Trichy: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா சித்த மருத்துவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, விரைவில் திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் கல்லூரிகள் துவங்கப்படும். பெட்டவாய்த்தலையை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் வகையில் தரம் உயர்த்தக்கூடிய அனைத்து பணிகளும் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: அண்ணாமலைக்கு டெல்லியில் கிடைத்த முக்கியத்துவம்!

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், சிறுகமணி பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, பெட்டவாய்த்தலை ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டியப்பன், சிறுகமணி பேரூராட்சி துணைத் தலைவர் குமார், சுகாதார பணி துணை இயக்குனர் சுப்பிரமணி, மாவட்ட சித்த மருத்துவர்கள் மார்கிரேட், பிரியதர்ஷினி, பெட்டவாய்த்தலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சாந்தி, சண்முகப்பிரியா, வட்டார மருத்துவர் விக்னேஷ், சிறுகமணி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜலிங்கம், திமுக பிரமுகர்கள் வைரமணி, கைக்குடிசாமி, சிறுகமணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெட்டவாய்த்தலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெட்டவாய்த்தலை சுற்றியுள்ள பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.