வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் – அமித்ஷா வலியுறுத்தல் !

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் போபால் மற்றும் குமா பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது தொகுதி நிதியின் கீழ் 210கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு அந்த நலத்திட்ட விழாவில் பேசிய அமித் ஷா, “இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் வீடுகளுக்கு சுத்தமான நர்மதா குடிநீர் உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இவ்வாறு அமித்ஷா நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.