புது வீடு வாங்க மட்டுமல்ல… இதுக்கு கூட வங்கியில் லோன் வாங்கலாம்!

பொதுவாக புது வீடு வாங்குவதற்கு அல்லது புதிய வீடு கட்டுவதற்கு தான் பெரும்பாலானோர் வங்கிகளில் லோன் வாங்குவார்கள் என்பது தெரிந்ததே.

ஆனால் புது வீடு வாங்கியவர்கள் அல்லது புதிய வீடு கட்டியவர்கள் அந்த வீட்டை புதுப்பிக்கவும் லோன் வாங்கலாம் என்பது பலரும் அறிந்திராத ஒரு தகவல்.

இந்த நிலையில் வீட்டை புதுப்பிக்க லோன் வாங்குவது எப்படி? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!

சொந்த வீடு கனவு

சொந்த வீடு கனவு

சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களது கனவை நனவாக்க சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்துடன் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவார்கள் என்பது தெரிந்ததே. சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிகள் ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருக்கும். குறிப்பாக கடன் வாங்குபவரின் வருமானம், வீட்டின் மதிப்பு, அவருடைய கிரெடிட் ஸ்கோர் ஆகியவைகளுக்கு ஏற்ப கடன் தொகை கிடைக்கும்.

 வீட்டை புதுப்பிக்க லோன்

வீட்டை புதுப்பிக்க லோன்

சொந்த வீடு வாங்குவதற்கு தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் போட்டி போட்டு கொண்டு கடன் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புது வீடு வாங்குவதற்கு மட்டுமின்றி வீட்டின் மாடலை மாற்றுவதற்கும், வீட்டை புதுப்பிக்கவும் பல வங்கிகள் தற்போது கடன்களை வழங்கி வருகிறது.

ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன்
 

ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன்

ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் என்று கூறப்படும் இந்த லோனை வாங்குவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். ஏற்கனவே வாங்கிய வீட்டை அல்லது கட்டிய வீட்டை புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தளங்கள் அமைப்பதற்கு கூடுதல் கடன் பெற்று கொள்ளலாம். இதற்கு ஏற்கனவே உங்களுக்கு வீட்டு கடன் இருந்தாலும் டாப்-அப் லோன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீங்கள் வீட்டுக் கடனை முடித்து இருந்தாலும் புதுப்பிப்பதற்காக ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் பெற்றுக்கொள்ளலாம்.

 மெட்ரோ சிட்டிகள்

மெட்ரோ சிட்டிகள்

வீடு கட்டும் போது அல்லது வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை நீங்கள் கவனமாக செய்தீர்களோ, அதனை ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் வாங்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் உங்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரை ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் கிடைக்கும். மெட்ரோ சிட்டி அல்லாத மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு 6 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார் விண்ணப்பம் செய்யலாம்?

யார் யார் விண்ணப்பம் செய்யலாம்?

ஹோம் லோன் உள்ளிட்ட மற்ற கடன்களை பெறும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தான் இந்த ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கு பொருந்தும். சம்பளம் வாங்குபவர்கள், வணிகம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வட்டி எவ்வளவு?

வட்டி எவ்வளவு?

ஹோம் லோனை போலவே ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கும் 6.5 சதவீதம் முதல் 10.15 சதவீதம் வரை பல்வேறு வங்கிகளில் வட்டி பெறப்படுகின்றன. இதில் குறைந்த வட்டியில் எந்த வங்கியில் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் கிடைக்கிறது என்பதை நீங்கள் தேர்வு செய்து கடனைப் பெற்றுக் கொள்ளலாம்.

வயது வரம்பு

வயது வரம்பு

21 வயது முதல் 60 வயது வரை ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் வாங்க தகுதியானவர்கள் என்பதும் சுயதொழில் செய்பவராக இருந்தால் 65 வயது வரை உள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பி செலுத்தும் காலம்

திருப்பி செலுத்தும் காலம்

கடனை திருப்பி செலுத்தும் காலம் 30 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த ஆண்டுகளையும் தேர்வு செய்துகொள்ளலாம். வீட்டை எந்த மாதிரி புதுப்பிக்க போகிறீர்கள்? எவ்வளவு செலவு செய்ய போகிறீர்கள்? என்பது குறித்த பட்ஜெட்டை வழங்க வேண்டும். மேலும் உங்கள் வருமான வரி சான்றிதழ், சமீபத்தில் தாக்கல் செய்த வருமான வரி தாக்கல் அறிக்கை, வங்கி அறிக்கைகள் மற்றும் வீட்டின் ஆவணங்களையும் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

நீங்கள் கடனுக்காக செலுத்தும் வட்டி ஆண்டுக்கு 30,000 வரை உங்கள் வருமான வரியில் விலக்கு பெறலாம் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் வாங்குவதற்கு மிகவும் முக்கியம். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் திறன் உள்ளவர் என்பதை அறிந்து வங்கிகள் உங்களுக்கு லோன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆன்லைனில் விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பம்

அனைத்து வங்கிகளும் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் வழங்குவதற்கு ஆன்லைனில் ஆப்ஷன் வைத்துள்ளது. வங்கியின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் விண்ணப்பம் செய்தால் உங்களது தகுதியை அறிந்து ஒரு சில நாட்களில் உங்களுக்கு வங்கி கடன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apply for Home Renovation Loan Online, Interest Rates and Eligibility Details!

Apply for Home Renovation Loan Online, Interest Rates and Eligibility Details! | புது வீடு வாங்க மட்டுமல்ல… இதுக்கு கூட வங்கியில் லோன் வாங்கலாம்!

Story first published: Monday, July 25, 2022, 7:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.