வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: அரசு சார்பில் ஒலிம்பியாட் செஸ் ஜோதியை வரவேற்கும் விழா பேனரில், முதல்வர் ரங்கசாமியின் படம் புறக்கணிக்கப்பட்டது என்.ஆர்.காங்., கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், மூன்று நியமன எம்.எல்.ஏ., பதவி மற்றும் அடுத்து வந்த ராஜ்யசபா எம்.பி., பதவியையும் பா.ஜ., எடுத்துக் கொண்டது.
இருப்பினும், மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட என்.ஆர்.காங்., தலைமை அமைதி காத்து வந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை ஓராண்டாகியும் மத்திய அரசு நிறைவேற்றாதது, என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், முதல்வரின் ஆதரவாளர்களான சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் இருவர், பா.ஜ.,விற்கு எதிராக ஓட்டு போட்ட சம்பவம் கூட்டணியில் புகைச்சலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வருகை தந்த ஒலிம்பியாட் செஸ் ஜோதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி உப்பளம் விளையாட்டரங்கில் நடந்தது.
இவ்விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரில், இடது மேல் புறத்தில் பிரதமர் மோடி படமும், வலது மேல் புறத்தில் கவர்னர் தமிழிசை மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் படம் இடம் பெற்றிருந்தன.
முதல்வர் ரங்கசாமி படம் புறக்கணிக்கப்பட்டது, அக்கட்சியினரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இதே விழா பீகார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடந்தபோது, அந்தந்த மாநில முதல்வர்களின் படம் பேனரில் இடம் பெற்றுள்ளது.ஆனால், புதுச்சேரி விழாவில் மட்டும் கவர்னரின் படம் இடம் பெற்றுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி ‘முதல்வர் புகைப்படம் இல்லாத புதுச்சேரி அரசு நிகழ்ச்சி’ என்ற தலைப்பிலான போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement