வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்று பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது.
இது, விண்டீசின் ஷாய் ஹோப் பங்கேற்ற 100வது ஒருநாள் போட்டியானது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவேஷ் கான் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பூரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
AFP
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது.
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 115 ரன்களை குவித்தார்.
இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தவான் (13), சுப்மான் கில் (43) சுமாரான துவக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ்(9 ரன்) நிலைக்கவில்லை. அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (63), சஞ்சு சாம்சன் (54) பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழந்தனர்.
A fantastic effort with the bat from @nicholas_47 & @shaidhope.🏏#MenInMaroon #WIvIND pic.twitter.com/fBieELMujQ
— Windies Cricket (@windiescricket) July 24, 2022
தீபக் ஹூடா (33) சற்று ஆறுதல் அளித்தார். ஷர்தல் தாக்கூர்(3), ஆவேஷ் கான்(10) ஏமாற்றினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடி ஆட்டம் ஆடிய அக்சர் படேல் அரைசதம் விளாசினார். 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 35 பந்தில் 64 ரன் விளாசிய அக்சர், கடைசி வரை அவுட் ஆகாமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
49.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றது.
ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையே கடைசி ஒருநாள் போட்டி 27ம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
.@akshar2026 played a sensational knock & bagged the Player of the Match award as #TeamIndia beat West Indies in the 2nd ODI to take an unassailable lead in the series. 👏 👏 #WIvIND
Scorecard▶️ https://t.co/EbX5JUciYM pic.twitter.com/4U9Ugah7vL
— BCCI (@BCCI) July 24, 2022