புதுடில்லி: நாட்டின் மலைவாழ் மக்கள் வகுப்பை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக மிக உயர்ந்து அந்தஸ்து கொண்ட ஜனாதிபதியாக திரவுபதி முர்மு (64) இன்று ( ஜூலை 25) பதவியேற்கிறார். பார்லி., மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் தலைமை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்புக்கு கிளம்பும் முன்னதாக டில்லி ராஜ்காட் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் மொத்தம் 6.76 லட்சம் ஓட்டுகளுடன், அதாவது 64 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வென்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15வது ஜனாதி பதியாக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
பார்லிமென்ட் மைய மண்டபத்தில் காலை 10:15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.அதன் பின் பார்லிமென்டில் அவர் உரையாற்றுவார்.
இதற்கு முன்பாக, ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் முர்முவை, பதவியில் இருந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். அங்கு முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.
பார்லிமென்டில் நடக்கும் நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு துாதர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர். பார்லிமென்டில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஜனாதிபதி மாளிகை செல்லும் முர்முவுக்கு முப்படைகளின் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.
70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது ;அமித்ஷா கருத்து
ஜனாதிபதியாக இன்று பதவியேற்கும் திரவுபதி முர்முவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மலை வாழ் மக்கள் இனத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. என்பது தான் ஒரு கவலையான விஷயம். மலை வாழ் மகக்களின் அதிகாரம் குறித்து வாய்பேச்சு மட்டுமே பேசும் அரசியல் கட்சிகளுக்கு இதுதான் பதிலடி என்றும் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement