மூத்த குடிமக்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பல ஆண்டுகளாக சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் அந்த சலுகை நிறுத்தப்பட்டது.
இதனால் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் மேற்கொண்டார்கள். இதனால் இந்த சலுகையை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு சலுகை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
வேற லெவலில் இந்தியன் ரயில்வே… உலக வங்கி 5 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல்!
மூத்த குடிமக்களுக்கு சலுகை
மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. டிக்கெட் கட்டணத்தில் அவர்களுக்கு விரைவில் சலுகைகள் கிடைக்கலாம். இதுகுறித்து வெளியாகி வரும் தகவலின்படி, மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு வகை பயணிகளுக்கு ரயில் கட்டணத்தில் சில சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
கோவிட் நேரத்தில் நிறுத்தம்
இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை பல ஆண்டுகளாக வழங்கி வந்த நிலையில் கோவிட் தொற்றுநோய்களின் போது அந்த சலுகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே துறைக்கு தேசிய போக்குவரத்திற்கான சமூக கடமை இருப்பதால் ரயில்வே அமைச்சகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாக தெரிகிறது.
ரயில்வே அமைச்சகம்
மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒருசிலருக்கு ரயில்வே பயண கட்டணத்தில் சில சலுகைகளை மீண்டும் தொடங்க முடியுமா என்று நாங்கள் சிந்திக்கிறோம். ரயில் பயணத்தை பொருத்தவரை இப்போது முழுமையான இயல்பு நிலை உள்ளதால் சலுகை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருண்காந்தி
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பயணிகள் மட்டுமின்றி சொந்த கட்சியினர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பாஜக எம்பி வருண் காந்தி, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டில் சலுகையை நிறுத்தும் முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார், எம்.பி.க்கள் ரயில் கட்டணத்தில் மானியம் பெறும்போது மூத்த குடிமக்களுக்கு தரும் சலுகை மட்டும் ஏன் சுமையாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வி மத்திய அரசை சிந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சலுகைகள்
இந்த வார தொடக்கத்தில், ரயில்வே அமைச்சகம், பாராளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஒருசிலருக்கு சலுகைகளை வழங்குவதற்கான செலவு குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் சராசரியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான பயணச் செலவை தேசிய போக்குவரத்து நிறுவனம் ஏற்கிறது என்று கூறினார்.
மூத்த குடிமக்கள் வரவேற்பு
மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மீண்டும் ரயில்வே கட்டணத்தில் சலுகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற தகவலை அடுத்து மூத்த குடிமக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கினால் அவர்களிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Railway Likely to Resume Concessions in Ticket Fare For Senior Citizens?
Indian Railway Likely to Resume Concessions in Ticket Fare For Senior Citizens and Sportspersons | மீண்டும் சலுகையை அறிவிக்க இருக்கும் இந்தியன் ரயில்வே.. யார் யாருக்கு தெரியுமா?