மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மன்னார்குடி அருகே பூவனூர் கிராமத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த தலத்தில், சிவபெருமானும் ராஜ ராஜேஸ்வரியாக அவதரித்த பார்வதி தேவியும் சதுரங்கம் விளையாடினார்கள் என சொல்வதுண்டு. பார்வதி தேவியான அம்பாளை சதுரங்க விளையாட்டில் வெற்றி கொண்டவர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் என்பதால் சதுரங்க விளையாட்டில் கலந்து கொள்ளும் குழந்தைகள் முதல் பல்வேறு வயதுடையவர்கள் பூவனூரில் ஸ்ரீ சதுரங்க வல்லப நாதரை வழிபட்டு சதுரங்க விளையாட்டு போட்டிக்கு செல்வர்.
அப்படி செல்பவர்கள் வெற்றி வாகை சூடலாம் என்பது இவ்வாலய வரலாற்றை அறிந்த தமிழக மக்களின் பக்தி கலந்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பூவனூர் கிராமத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதார் கோயிலில் ராஜேஸ்வரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செஸ் விளையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM