அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனினும் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இதுகுறித்த ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலைகளை வழமை போன்று நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இருந்து பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அமைச்சர் ,பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.