புலம்பெயர்வோர் இனி பிரித்தானியாவுக்குச் செல்லமாட்டார்கள், அவர்கள் ஐரோப்பாவின் பிறபகுதிகளுக்குச் செல்லத்துவங்கிவிடுவார்கள் என்கிறார்கள் மனிதக்கடத்தல்காரர்கள்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அவற்றில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது ஒரு திட்டம்.
பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து எப்படியாவது சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பிவிடவேண்டும் என ஏராளம் பணச்செலவில் ருவாண்டாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, விமானம் எல்லாம் தயார் செய்து, விமானம் புறப்பட இருந்த நேரத்தில், நீதிமன்றம் குறுக்கிட்டு பிரீத்தியின் திட்டத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது.
ஆனாலும், அத்திட்டத்தை மாற்றும் எண்ணம் பிரித்தானிய அரசுக்கு இல்லை!
news.sky
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி எதிர்பார்த்ததுபோலவே, அவரது திட்டம் புலம்பெயர்வோரை அச்சுறுத்தியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும், அந்த தகவலைத் தெரிவித்துள்ளது சட்டவிரோத புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குக் கடத்தும் மனிதக்கடத்தல்காரர்கள்!
ஈராக்கைச் சேர்ந்த கடத்தல்காரர் ஒருவர் கூறும்போது, புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இத்திட்டத்தால் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றாலும், புலம்பெயர்தல் தொடரத்தான் செய்யும், அதாவது, பிரித்தானியாவுக்கு பதிலாக, மக்கள் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்வார்கள் என்கிறார்.
இதற்கிடையில், பொலிசார் மற்றும் எல்லை அதிகாரிகள் கண்ணில் படாமல் ஐரோப்பாவுக்கு பயணிக்க புதிய பாதை ஒன்றை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிரவைக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் மற்றொரு கடத்தல்காரர்.
news.sky