இந்தியாவின் பிற முன்னணி ஐடி நிறுவனங்களைப் போலவே இன்போசிஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் குறைவான லாபத்தையும், வருமானத்தையும் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.72 சதவீதம் சரிந்து 1495.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. ஜூலை 24ஆம் தேதி இன்போசிஸ் தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஜூலை 25 தேதி காலை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1478.35 ரூபாய் வரையில் சரிந்தது.
இன்போசிஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் புதிதாக 21,171 ஊழியர்களைப் பணியில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டு முடிவில் 3,35,186 ஆக உயர்ந்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ புலம்பல்.. 62% வருமானம் சம்பளத்திற்கு மட்டும் செலவு..!
இன்போசிஸ் லாபம்
இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் 3.17 சதவீதம் அதிகரித்து 5,360 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 5,195 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் வருவாய்
ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 23.6 சதவீதம் அதிகரித்து 34,470 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் நிலையான நாணய மதிப்பீட்டில் வருவாய் அளவு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின்
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 20.1 சதவீதமாக உள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 1.4 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 3.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. சந்தை கணிப்புகளில் வருவாய் பிரிவில் மட்டுமே இன்போசிஸ் முந்தியுள்ளது.
இன்போசிஸ் வருவாய் வளர்ச்சி
2023ஆம் நிதியாண்டில் 14-16 சதவீதம் வருவாய் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த இன்போசிஸ் நடப்பு ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி விகிதத்தில் 21-23 சதவீத வளர்ச்சியில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யவில்லை.
இன்போசிஸ் பங்குகள்
இன்போசிஸ் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20.95 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாத தரவுகளைப் பார்க்கும் போது 1.70 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்த வேளையில் இன்போசிஸ் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது.
Infosys: Q1 Profit up 3.2 percent to Rs 5360 crore
Infosys: Q1 Profit up 3.2 percent to Rs 5360 crore இன்போசிஸ்: ஜூன் காலாண்டில் லாபம், வருவாய் அசத்தலான வளர்ச்சி..!