சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
நடப்பாண்டின் 6 மாதங்களில் 2 லட்சத்து 19 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தோனேஷியா முதலிடத்தையும், மலேசியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து 56 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.