உடல் எடை குறைய க்ரீன் டீ ஓகே.. ஆனா இந்த தவறுகளை நிச்சயம் கவனிங்க

உடல் எடை குறைய க்ரீன் டீ குடிப்பது நல்லது ஆனால் நீங்கள் க்ரீன் டீ குடிக்கும்போது இந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். உணவுக்கு பின் உடனடியாக க்ரீன் டீ குடிக்க வேண்டாம். நீங்கள் சாப்பிட்ட உணவில் இருக்கும் புரோட்டின் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் க்ரீன் டீ இந்த செயலை தடுக்கும் என்பதால் அபாயம் ஏற்படும்.

நல்ல சூடாக இருக்கும் க்ரீன் டீயை குடிப்பதை தவிர்க்கவும்.  வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்க கூடாது. இரவு அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பதால், வயிற்றில் அமிலம் ஏற்கனவே சுரக்கும்.  இந்நிலையில் இதை மேலும் க்ரீன் டீ அதிகப்படுத்துவதால், அஜூரணம் ஏற்படும்.

சூடான க்ரீன் டீயில் தேனை சேர்க்க வேண்டாம். இதில் இருக்கும் வைட்டமின்கள் அழிந்துவிடும் என்பதால்,சூடு தனிந்ததும் தேன் சேர்த்து சாப்பிடவும். க்ரீன் டீயுடன் மருந்துகளை சேர்த்து சாப்பிட வேண்டாம். க்ரீன் டீயுடன் கலந்த மாத்திரை உங்களுக்கு அஜீரணம் ஏற்படுத்தும்.

அவசர அவசரமாக க்ரீன் டீ குடிக்க வேண்டாம். நிதானமாக க்ரீன் டீயை குடியுங்கள். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு க்ரீன் டீ பேங்க்கை பயன்படுத்தக்கூடாது. இதுவும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.