இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள வேளையில் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தற்போது டிஜிட்டல் பேமெண்ட் துறையில் QR Code வாயிலாகச் செய்யப்படும் அனைத்து பேமெண்ட்களும் வங்கிக் கணக்குடன் மற்றும் டெபிட் கார்டு வாயிலாகத் தான் செய்யப்படுகிறது. இதை விரிவாக்கம் செய்யும் விதமாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்த ஆர்பிஐ சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இதைச் செயல்படுத்த உள்ளதாக நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரஷ்யாவின் திட்டம் என்ன.. திர்ஹாம்-ல் பேமெண்ட்.. அப்போ இந்திய ரூபாய் வேண்டாமா?
NPCI அமைப்பு
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா தற்போது அனைத்து வங்கிகளிடமும் QR Code பேமெண்ட் நெட்வொர்க்-ல் ரூபே கிரெடிட் கார்ட் பணப் பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது மட்டும் நடந்தால் கிரெடிட் கார்டு வர்த்தகம் புதிய வரலாற்று உச்சத்தைத் தொடும்.
கிரெடிட் கார்டு பேமெண்ட்
இதேவேளையில் கிரெடிட் கார்டு பேமெண்ட்-ல் 2 சதவீதம் அக்செப்டன்ஸ் கட்டணம் இருக்கும் நிலையில், இதை எளிமையாக்கும் விதமாக நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கிய முடிவையும் எடுத்துள்ளது. அதாவது பெரிய வியாபாரிகளிடம் மட்டும் அக்செப்டன்ஸ் கட்டணத்தை வசூலித்துவிட்டு, சிறு வியாபாரிகளுக்கு இதில் விலக்கு அளிக்கத் திட்டமிட்டு உள்ளது.
NPCI சிஇஓ திலீப்
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ -வான திலீப் கூறுகையில் தினமும் 100 கோடி பணப் பரிமாற்றங்களை டிஜிட்டல் பிளாட்பார்ம்ஸ் வாயிலாகச் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இதை எட்ட இரண்டு பிரிவை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளோம்.
2 முறை
ஒன்று கான்டெக்ட்லெஸ் பேமெண்ட்-ஐ எளிமையாக்கும் கார்டு டோக்னைசேஷன் முறை, 2வதாக டோல் கலெக்ஷன் போல் பார்கிங், பெட்ரோல் பங்க் போன்ற பல இடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் முறையைக் கட்டாயமாகக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிரெடிட் கார்டு
டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் தற்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கும் எளிய பேமெண்ட் முறையான QR Code பேமெண்ட்-ஐ சேவையில் கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்ய முடிந்தால் பல கோடி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் அதிகளவிலான பணத்தைப் பயன்படுத்தத் துவங்குவார்கள். இது கிரெடிட் கார்டு சேவை நிறுவனங்களுக்கும், கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் ஜாக்பாட் தான்.
NPCI soon to introduce Scan QR code with RuPay credit cards; Talks with bank
NPCI soon to introduce Scan QR code with RuPay credit cards; Talks with bank கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்.. NPCI புதிய அறிவிப்பு..!