இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 சதவீதம் சரிந்து வரலாற்று சரிவை எதிர்கொண்டு உள்ளது.
டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மீதான அதிகப்படியான ஆர்வத்தில் சோமேட்டோ பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சோமேட்டோ பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமேட்டோ பங்குகள் 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 66.11 சதவீதம் வரையில் சரிந்தது. ஜனவரி 3ஆம் தேதி சோமேட்டோ பங்குகள் 141 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஐபிஓ வெளியிட்ட பின்பு 169 ரூபாய் வரையில் உயர்ந்தது..
சரி இன்றைய தடாலடி சரிவுக்கு என்ன காரணம்..?
சோமேட்டோ ஐபிஓ
சோமேட்டோ ஐபிஓவிற்கு முந்தைய பங்குதாரர்களுக்கான (ப்ரோமோட்டர்கள், ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள்) லாக்-இன் காலம் முடிவடைந்ததால், திங்கள்கிழமை காலை Zomato பங்குகள் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன.
12 சதவீதம் சரிவு
திங்கட்கிழமையின் ஆரம்பக் கட்ட வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் சரிந்தன. ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டதே போதுமான நிதி இல்லாமல் இருந்த காரணத்தால் தான். ஐபிஓ வெளியிட்ட பின்பும் பல தடுமாற்றங்களை எதிர்கொண்டது.
Blinkit நிறுவனம்
சமீபத்தில் சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக Blinkit நிறுவனத்தைக் கைப்பற்றியது. இது நீண்ட கால அடிப்படையில் சிறந்த முடிவாக இருந்தாலும், ஒவ்வொரு காலாண்டிலும் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை.
ப்ரீ ஆஃபர் ஈக்விட்டி
இதற்கிடையில் ஐிபிஓ வெளியிடுவதற்கு முன்பு ப்ரீ ஆஃபர் ஈக்விட்டி பிரிவில் பங்குகளை வாங்கிய ப்ரோமோட்டர்கள், ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான லாக்இன் காலம் ஜூலை 23 உடன் முடிந்த ஒரு வருட காலம் முடிந்தது.
46 ரூபாய்
இந்த ஒரு வருட காலத்தில் சோமேட்டோ செயல்பாடுகளைப் பார்த்த முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் 12 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் மூலம் தற்போது 10.62 சதவீத சரிவில் சோமேட்டோ பங்குகள் 47.95 ரூபாயாக உள்ளது. இன்று அதிகப்படியாக 46 ரூபாய் வரையில் சரிந்தது.
Zomato Shares Fall new Record Low at 46 rupees; Amid Lock-In period ends For Pre-IPO Investors Expires
Zomato Shares Fall to new Record Low at 46 rupees; Amid Lock-In period ends For Pre-IPO Investors Expires. Massive selling of zomato shares even after blinkit acquisition கதவை திறந்ததும் விற்பனை.. சோமேட்டோ கண்ணீர்..!