ரம்யா கவுடாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
பெங்களூரை சேர்ந்த ரம்யா கவுடா 'அபியும் நானும்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக ராசாத்தி தொடரிலும் நடித்திக்கிறார். வாத்தி என்ற கதாபாத்திரத்தில் காதலனை உருட்டி மிரட்டி நடிப்பில் கலக்கி வரும் ரம்யாவிற்கு தற்போது தமிழக இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, சமீப காலங்களில் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையதள ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.