திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் +2 மாணவி (17) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், அது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவலை அளிக்கவில்லை எனக் கூறியும், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் அரசுப் பேருந்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சின்னசேலம் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த சம்பவமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியின் விடுதியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
இதையும் படிக்க: “என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM