சமீபத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையின் ஏலத்தை எடுத்து டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் அடுத்ததாக ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை எடுத்து உள்ளது.
இது குறித்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்புடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்து வரும் 7 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு தேடி வரும் வங்கிச்சேவை… ஆரம்பித்து வைப்பது எந்த வங்கி தெரியுமா?
ஒப்பந்த மதிப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் ஒப்பந்தம், 250 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமான மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் ஆகிய போட்டிகளை இந்த ஒப்பந்தம் காரணமாக இனி இந்தியாவில் பார்க்கலாம்
7 ஆண்டுகள் ஒப்பந்தம்
இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) ஏழு ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளதாக நிர்வாகக் குழு நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 250 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2023-24 சீசனில் இருந்து சர்வதேச போட்டிகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்நாட்டு பிக் பாஷ் லீக் “மற்றும் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளுக்கு ஒளிபரப்பப்படும்.
சிறந்த விளையாட்டு தளம்
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியபோது, ‘டிஸ்னி ஸ்டார் இந்தியாவில் விளையாட்டுக்கு சிறந்த தளமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு கோடையிலும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார்.
சோனி நிறுவனம்
எங்களது தற்போதைய போட்டிகளை ஒளிபரப்பி வரும் சோனிநிறுவனத்தின் உடனான கூட்டாண்மைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் மீண்டும் சோனியுடன் இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டார்
இந்த ஒப்பந்தம் குறித்து டிஸ்னி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தலைவர் சஞ்சோக் குப்தா அவர்கள் கூறியபோது, ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ற அமைப்பு கிரிக்கெட் உலகம் வழங்கும் சில சிறந்த போட்டிகளை நாங்கள் ஒளிபரப்புவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத சில போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ளதால் மேலும் பல சிறப்பாக போட்டிகளை ரசிகர்கள் ஹாட்ஸ்டாரில் காணலாம் என்றும் தெரிவித்தார்.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை
டிஸ்னிக்கு சொந்தமான ஸ்டார் இந்தியா இந்தியன் பிரீமியர் லீக்கின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடந்த மாதம் $3.02 பில்லியன் கொடுத்து தக்க வைத்து கொண்டது. டிஸ்னி ஸ்டார் என்பது வால்ட் டிஸ்னி கோ நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாகும்.
Cricket Australia and Disney Star ink 7-year deal to beam matches in India
Cricket Australia and Disney Star ink 7-year deal to beam matches in India | நீங்கள் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளரா? ஏழு வருடங்களுக்கு இனி ஜாலிதான்!