தமிழக மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க முதல்வர் கோரிக்கை

சென்னை

லங்கை நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 தமிழக மீனவர்கள் கடந்த 20-7-2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ”இலங்கை வசம் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் உள்ளது.  அவற்றில் சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும்  இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.  எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையைக் கோருகிறோம்.

கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களைச் சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.