மத்திய கென்யாவில் 40 மீட்டர் உயரமுடைய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மேரு கவுண்டியில் இருந்து நைரோபி நோக்கி நெடுஞ்சாலை வழியாக அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து நித்தி ஆற்றின் மீது செல்லும் பாலம் வழியாக சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு மீது மோதிச்சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.