5G Spectrum India Auction: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவில் 5G நெட்வொர்க் அறிமுகம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, நாட்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (ஜூலை 26) தொடங்குகிறது. நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், பிற நிறுவனங்களும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கின்றன.
இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். 5Gக்கு பின் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சாமானியனை இது பாதிக்குமா? அன்றாட வாழ்வில் புதிய மாற்றங்கள் இருக்குமா? போன்ற கேள்விகள் பலரது மனதில் எழலாம். ஆனால், நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை மட்டும் நம்மால் உறுதியாகக் கூற முடியும்.
முன்னதாக 2000-களில், பெரும்பாலான மக்கள் 2G நெட்வொர்க்கைப் பயன்படுத்தினர். இந்தியாவில் 3ஜி, 4ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் வீடியோ அழைப்பு, லைவ் ஸ்ட்ரீமிங் போன்ற அதிவேக அம்சங்களை அனுபவிக்க முடிந்தது. அதேபோல 5ஜி நெட்வொர்க் வந்த பிறகு பல புதிய விஷயங்களைப் பார்க்கலாம்.
SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!
வேகம் எப்படி இருக்கும்?
பலருக்கும், 5G என்றால் முதலில் வேகமான இணைய வேகம் என்று தான் மனதில் தோன்றும். இதற்குப் பின்னால் உள்ள காரணம், நம் வாழ்க்கை அழைப்பின் பாதையில் அல்ல, தரவுகளின் பாதையில் உள்ளது. நெட்வொர்க்கிற்கு மேலே உள்ள தலைமுறை வேகமான இணைய வேகத்தை கொண்டு வரும். 4G நெட்வொர்க்கில் 100Mbps வரை வேகம் இருந்தது. ஆனால், இதே 5ஜியில் Gbps கணக்கில் கிடைக்கும்.
நல்ல நெட்வொர்க் கவரேஜ்:
5G நெட்வொர்க்கில் சிறந்த அழைப்பு அனுபவம் கிடைக்கலாம். அழைப்புகள் நடுவில் தடைபடுவது போன்ற எந்த பிரச்சினையும் இருக்காது. இது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெட்வொர்க் வரம்பை அதிகரிக்க மற்றொரு வாய்ப்பை வழங்கும். மேலும், 5ஜி நெட்வொர்க் 4ஜியை விட 100 மடங்கு வேகமாக இருக்கும்.
அதாவது, பயனர்கள் உயர்தர வீடியோக்கள், அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ அழைப்பு போன்ற பல நன்மைகளைப் பெறுவார்கள். இது மெதுவான இணைய வேகத்தில் இருந்து பயனர்களை விடுவிக்கும். இதே நேரத்தில், தொழில்நுட்பத்தின் பல புதிய பரிமாணங்கள் திறக்கப்படும்.
மேலதிக செய்தி:
Flipkart Offers: சிறந்த ஆஃபர்களுடன் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்!
5ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கி பொதுமக்களை சென்றடைய நேரம் எடுக்கும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பெரிய நகரங்களில் வரலாம் என்றாலும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பயன்பாட்டுக்கு வர சிறு காலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலிவு விலையில் அமோலெட் டிஸ்ப்ளே உடன் Zebronics Iconic Smartwatch 3 அறிமுகம்!
பல துறைகள் மேம்படும்
தரவை சார்ந்திருக்கும் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைக் காணும். புதிய தொழில் முனைவோர்கள் உருவாக வாய்ப்பிருக்கும். பெரிய வேலைகளை சிறிய நேரத்தில் செய்து முடிக்க முடியும். டிஜிட்டல் துறை வேகமாக செயல்படத் தொடங்கும். மக்களின் காத்திருப்பு நேரம் இன்னும் பல மடங்கு குறையும்.
மேலதிக செய்தி:
இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு MIUI 14 ரெடி – முழு பட்டியலையும் காணுங்கள்!
அதே நேரத்தில், ஸ்மார்ட் பாதையில் உலகம் சுழன்று வருவதால், மக்களின் தேவைகள் அதிகரிக்கும். கூடுதல் கேட்ஜெட்டுகள் சந்தைகளை அலங்கரிக்கும். ஆனால், வளர்ச்சி காணும் வேளையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரிக்கும். இதனை சரியாக கையாள நல்ல கட்டமைப்பை உருவாக்குவது, அரசின் பணிச்சுமையை கூட்டும் என்பது தவிர்க்கமுடியாதது.