பணம் எடுக்கும் விதிமுறைகள் மாற்றம்.. SBI ஏடிஎம் வைத்திருப்போர் இதை தெரிந்து கொள்ளுங்க!

ஏடிஎம்-களில் பணம் எடுக்க ஒருமுறை பாஸ்வேர்ட் என்று அழைக்கப்படும் ஓடிபி-யை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது எஸ்பிஐ.

இது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை குறைக்கவும், மோசடிகளை தவிர்க்கவும் எஸ்பிஐ இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

ஆக இனி எஸ்பிஐ ஏடிஎம் பண பரிவர்த்தனையில் 10,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது, இந்த நடைமுறை செய்ய கட்டாயமாக்கப்படவுள்ளது.

இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள்… முழு லிஸ்ட்!

ஓடிபி அவசியம்

ஓடிபி அவசியம்

இந்த ஒடிபி பாஸ்வேர்டானது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆக அடுத்த பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனில், வாடிக்கையாளார்கள் அடுத்த முறை புதியதாக வரும் ஓடிபியை பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். ஆக இதன் மூலம் ஓடிபி பதிவிட்டால் மட்டுமே இனி 10,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்க முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு

எஸ்பிஐ-யின் இந்த விதிமுறை காரணமாக இனி பெரியளவிலான மோசடிகள் நடப்பதை தடுக்க முடியும் என வங்கி தரப்பு நம்புகிறது. இதன் மூலம் உங்களது கார்டுகள் திருட்டுபோனால், குளோனிங் செய்யப்பட்டாகும் கூட பெரியளவில் தொகையை திருட முடியாது எனலாம். மொத்தத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய இது உதவியாக இருக்கும்.

எப்படி ஓடிபி வேலை செய்கிறது?
 

எப்படி ஓடிபி வேலை செய்கிறது?

உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கே இந்த 4 இலக்க ஒடிபி எண் ஆனது வரும். இது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலமே உங்கள் பண பரிவர்த்தனையை முடித்துக் கொள்ள முடியும்.

எப்படி பணம் எடுப்பது?

எப்படி பணம் எடுப்பது?

நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருப்பது அவசியமாகும்.

உங்களது ஏடிஎம் கார்டினை ஏடிஎம் மெஷினில் செலுத்தி, பின்னர் பின் நம்பரை பதிவிட வேண்டும். அதன் பிறகு நீங்கள் எவ்வளவு தொகை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பதிவிட வேண்டும். இது 10,000 ரூபாயிக்கு மேலாக இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

ஆக ஒடிபியை பதிவு செய்த பிறகு உங்கள் பரிவர்த்தனையை முடித்து கொள்ளலாம்.

இது குறித்து எஸ்பிஐ ஏடிஎம்மில் ஜனவரி 1, 2020ல் அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது பாதுகாப்பு கருதி அனைத்து ஏடிஎம்-களிலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI ATM Withdrawal Rules Changed? How to withdraw money?

SBI ATM Withdrawal Rules Changed? How to withdraw money?/பணம் எடுக்கும் விதிமுறைகள் மாற்றம்.. SBI ஏடிஎம் வைத்திருப்போர் இதை தெரிந்து கொள்ளுங்க!

Story first published: Tuesday, July 26, 2022, 15:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.