வில்வா பற்றி பலரும் கேள்விப் பட்டிருக்கலாம். குறிப்பாக ஆர்கானிக் பொருட்கள் பயன்படுத்துவோர் பலரும் அறிந்திருக்கலாம்.
தன் தாயின் மேல் கொண்ட பாசம் காரணமாக, அவரின் நினைவாக ஒரு பாசமிகு மகளால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் வில்வா.
இன்று பற்பல தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகின்றது. அப்படி என தான் செய்து வருகின்றார் கிருத்திகா? யார் இவர்? என்ன வணிகம் செய்கிறார் வாருங்கள் பார்க்கலாம்.
ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..!
வில்வாவின் தொடக்கம்
கிருத்திகாவின் தாயார் கடுமையான சரும பிரச்சனையால் அவதிபடுகிறார். ஒரு கட்டத்தில் சரும நோய் காரானமாகவே இறந்துள்ளார். அவர் சரும பிரச்சனைக்கு பல மருத்துவம் பார்த்தாலும், கடைசி வரையில் தனது தாயை காப்பாற்ற முடியவில்லையே என்று மன அழுத்தமும் இருந்துள்ளது. எப்படியேனும் அதிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணியவருக்கு, தனது தாயை போலவே பலரும் அவதிப்படுவதை பார்த்து, இதற்கு ஏதேனும் இயற்கை முறையில் சரி செய்ய வேண்டும் என நினைத்தவருக்கு தோன்றியது தான் வில்வா.
குடும்பத்தினரிடம் சோதனை
ஆரம்பத்தில் பல்வேறு இயற்கை பொருட்களை கொண்டு சருமத்திற்கு உகந்த பொருட்களை தயார் செய்ய பல ஆய்வுகளை மேற்கொண்டு, அதனை இறுதியில் அதற்கு வடிவமும் கொடுத்துள்ளார். இதனை ஆரம்பத்தில் தனது குடும்பத்தினருக்கோ கொடுத்து சோதனை செய்து, நல்ல பலன் கிடைக்கவே வணிக முயற்சியை செய்ய நினைக்கிறார்.
யார் இந்த கிருத்திகா?
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோபிசெட்டிபாளையத்தில் பிறந்த கிருத்திகா குமரன், விவசாய குடும்பத்தில் பிறந்த பெண். 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர், தமிழகத்தினை விட்டு அந்த காலகட்டத்தில் வெளியே சென்றதில்லை என்கிறார். தனக்கு அதிகம் வணிகம் பற்றி தெரியாது என்று கூறுகிறார்.
இப்படி தான் தொழில் ஆரம்பித்தது?
இப்படி இருக்கும் சூழலில் தான் தனது தனது தாய் சரும நோயால் இறந்துபோகிறார். பல ஆண்டுகள் தாயை காப்பாற்ற போராடிய கிருத்திகா. எதுவும் பலன் கொடுத்தால் அவரை இழந்து விட்டதாகவும் கூறுகிறார்.
இதற்கிடையில் இயற்கை அழகு சாதனவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்த கிருத்திகா, தங்களது விவசாய நிலத்தில் மேயும் ஆடுகள் மூலம் கிடைக்கும் பாலை வைத்து, சோப்பை தயாரிக்க முயன்று வருகிறார். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு அதில் வெற்றி பெறவே, இறுதியாக அதனை தொழிலாக ஆரம்பிக்கிறார்.
பல பொருட்கள் உற்பத்தி
ஆரம்பத்தில் சோப்பு மட்டுமே தயாரித்தவர், பின்னர் பல பொருட்களையும் தயாரிக்க ஆரம்பிக்கிறார். இதனை கையால் தயாரிக்கிறார் என்பது தான் இன்னும் சாதகமான விஷயமே. இதனை ஆரம்பத்தில் வணிகமாக செய்ய திட்டமிடவில்லை என்றும், இதனை தனது மன திருப்திக்காகவும், தன் தாயின் இழப்பில் இருந்து மீளவும் தொடங்கியதாகவும் கூறுகிறார். ஆனால் அதன் பிறகே இதனை வணிகமாகவும் மாற்றியுள்ளார். இதற்கு கிருத்திகாவின் கணவரும் துணையாக இருக்கவே, தம்பதிகள் இருவரும் சேர்ந்து வணிகத்தினை மிகப்பெரிய அளவில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
எனென்ன பொருட்கள் பயன்பாடு
ஆட்டுபாலில் இருந்து தயாரித்த சோப் ஆனது, கெமிக்கல்கள் போன்ற அலர்ஜிகளில் இருந்தும், சரும நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. எங்களது அனைத்து தயாரிப்புகளிலும் நாங்கள் என்னென்ன பயன்படுத்துகிறோம் என்பதையும் அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இதற்கான மூலப் பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விற்பனை எப்படி?
இந்த பொருட்களின் விலை 160 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரையில் இருக்கும். வில்வா தற்போது இந்தியா முழுவதும் ஆர்டர்களை அனுப்பி வருகின்றது. அதோடு அமெரிக்கா, இங்கிலாந்து அரபு நாடுகள்ம் சிங்கப்பூர் என பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சென்னை கோயம்புத்தூரில் வில்வா கடை உள்ளது. அதன் இணையதளம் மூலம் ஆன்லைனிலும் விற்பனை செய்து வருகின்றது. அதோடு நய்கா, அமேசான் போன்ற இணையதளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்து வருகின்றது.
பெஸ்ட் செல்லர்
எல்லா பொருட்களுமே இயற்கையாய் விளைவிக்கும் பொருட்களை கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றது. குறிப்பாக ஆட்டுப்பால் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு மற்றும் ஷாம்பு என்பது பெஸ்ட் செல்லராகவும் உள்ளது.
ஆர்கானிக் அரிசி
இதனோடு சில ஆர்கானிக் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக வெள்ளை அரிசி, சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி, மாப்பிளை சம்பா என 50 வகையான அரிசிகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றோம் என கூறுகின்றனர் இந்த வணிக தம்பதிகள்..
Erode couple earns huge income by making many products like soap and shampoo from goat’s milk without chemicals
Erode couple earns huge income by making many products like soap and shampoo from goat’s milk without chemicals/ஆட்டுபாலில் சோப்.. பழமையான அரிசிகள்.. லட்சங்களில் வருமானம் ஈட்டும் தம்பதிகள்.. எப்படி?!