முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரது தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் கோரிக்கை ஏற்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனால், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி சிறைக்கு திரும்ப வேண்டியதிருந்தது.
ஆனால், பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு ஏழாவது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 26-ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.