மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் திரள் ட்ரோன்கள், கார்பைன்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அடங்கும் எனத் தெரிகிறது. மேலும் இந்தக் கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவ தளபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?!
கிழக்கு லடாக் எல்லை
இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீனாவுடனான இந்தியாவின் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான எல்லை பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
நான்கு லட்சம் கார்பைன்
வழக்கமான மற்றும் கலப்பினப் போரின் தற்போதைய சிக்கலான கட்டமைப்பை எதிர்த்துப் போராட நான்கு லட்சம் நெருக்கமான போர் கார்பைன்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.
புதிய ஆயுத கொள்முதல்
மத்திய பாதுகாப்புத் துறையின் இந்தப் புதிய ஆயுத கொள்முதல் முடிவு இந்தியாவில் சிறிய ஆயுத உற்பத்தித் தொழிலுக்கு இது ஒரு பெரிய உத்வேகத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் சிறிய ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகளை மேம்படுத்துவதாகவும் அமைகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
எஸ்400 ஏவுகணை
இதேபோல் இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்த நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நவீன ஏவுகணைகளான ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைகளைப் பெற ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் போட்டது. ரூ35,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் முதல் தொகுப்பு, ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், எஸ்400 ஏவுகணை விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
சீனாவுக்குப் பதிலடி
இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கான தடைகளிலிருந்து சமீபத்தில் விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அதிநவீன ஆயுதங்கள் தேவை.
உக்ரைன் ராணுவ வீரரை துளைத்த புல்லட்.. உயிரை காப்பாற்றிய ஐபோன்!
Defence ministry approves arms procurement proposals worth Rs 28732 crore
Defence ministry approves arms procurement proposals worth Rs 28,732 crore 28,732 கோடி ரூபாய்க்கு ஆயுத கொள்முதல்.. மத்திய அரசு ஒப்புதல்..!