பெங்களூரு : “ஊழல் குறித்து, பகிரங்கமாக விவாதிக்க நாங்கள் தயார். எந்த சூழ்நிலையிலும், பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ., தலைவர் சி.டி.ரவியின் சவாலை, நாங்கள் ஏற்கிறோம். ஊழல் குறித்து விவாதிக்க, நாங்கள் தயார்.எங்கு, யாருடன், எப்போது விவாதிக்க வேண்டும் என்பதை, விரைவில் முடிவு செய்யட்டும்.
நேரத்தை நானே கூறுகிறேன்.சி.டி.ரவியுடன் விவாதிக்க வேண்டுமா, மாநில பா.ஜ., தலைவருடனா அல்லது மாநில முதல்வருடனா என்பதை முடிவு செய்யட்டும். முதலில் பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்துள்ள, 40 சதவீதம் கமிஷன் முறைகேடு, கொரோனா நேரத்தில் நடந்த ஊழல் குறித்து, விவாதிக்கவேண்டும்.ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த நாளன்று, முதல்வர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாயும், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும், ஈஸ்வரப்பா நிரபராதி என்றனர்.
வழக்கு விசாரணை நடத்திய போலீசார், ‘பி’ அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.அரசே நெருக்கடி கொடுத்து, போலீசாரை, ‘பி’ அறிக்கை தாக்கல் செய்ய வைத்தது. ஈஸ்வரப்பா மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க முயற்சித்துள்ளது. சந்தோஷ் பாட்டீல் தற்கொலை குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது, எங்களின் வலியுறுத்தலாகும்.பெரும்பாலான துறைகளில், ஊழல் நடந்துள்ளது. இதைப் பற்றி முதலில் விவாதிக்க வேண்டும். 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு சுமத்திய ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கெம்பண்ணா கூறியதை, ஏன் பொருட்படுத்தவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement