உலக செஸ் போட்டிகளில் 22 ஆண்டுகளாக விளையாடி வரும் ஹரிகா, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 மாத கர்ப்பிணியாக துணிச்சலாகப் பங்கேற்கிறார் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா. யார் இந்த ஹரிகா?
12 வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான ஹரிகா, உலக செஸ் போட்டிகளிலும் இந்திய செஸ் போட்டிகளிலும் கடந்த 22 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஹரிகா தற்போது உலகின் பத்தாம் நிலை வீராங்கனையாக இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா, தனது 6 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். 9வது வயதில், பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
ஹரிகா இதுவரை 3 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். தேசிய அளவில் 16 பட்டங்கள் உட்பட 45-க்கும் அதிகமான பட்டங்களை பெற்றுள்ளார் ஹரிகா.
ஹரிகா கடஎந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இதன் மூலம் ஹரிகா இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றா இரண்டாவது பெண் என்ற சாதனையைப் படைத்தார். இந்தியாவில் ஹரிகாவுக்குப் பிறகு எந்த பெண்ணும் இதுவரை கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறவில்லை என்பதே அவருடைய சாதனைக்கு சான்று.
இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் ஹரிகா தற்போது 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் 8 மாதம் கர்ப்பிணியாக துணிச்சலாகப் பங்கேற்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஹரிகா பங்கேற்பது மூலம் இந்த ஒலிம்பியாட்டில் கவனம் பெற்றுள்ளது. ஹரிகாவின் அனுபவம் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”