இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்று லார்சன் டூப்ரோ. இந்த நிறுவனம் இன்று அதன் ஜூன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஜூன் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்து, 1702 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது வலுவான உள்கட்டமைப்பு தேவை காரணமாக வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1174 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ-ல் மட்டும் ரூ.1.45 லட்சம் கோடி ரைட் ஆப்.. ஒரே வங்கியில் இவ்வளவா.. மற்ற வங்கிகளின் நிலை?
வருவாய் விகிதம்
இதற்கிடையில் எல் & டி- யின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் விகிதம், கடந்த ஆண்டினை காட்டிலும் 22% அதிகரித்து 35,853 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 29,334 கோடி ரூபாயாக இருந்தது. இது ஐடி மற்றும் தொழில் நுட்பத் துறையில் வலுவான வளர்ச்சியினை கண்ட நிலையில், இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச வருவாய்
இந்த உள்கட்டமைப்பு ஜாம்பவான், சர்வதேச வணிகத்தில் மட்டும் இந்த காலாண்டில் 13,235 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளார். இது மொத்த வருவாயில் 37% ஆகும்.
ஆர்டர் விகிதம்
மொத்தத்தில் ஜூன் காலாண்டில் வலுவான ஆர்டரினையும் இந்த நிறுவனம் பதிவும் செய்துள்ளது. இதில் குழும அளவிலான 41,805 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டினை காட்டிலும் 57% அதிகமாகும்.
எந்தெந்த துறையில் ஆர்டர்?
எல் & டி பெற்ற ஆர்டர்களில் பொது இடங்கள், மெட்ரோ, வாட்டர் மேனேஜ்மென்ட் & வேஸ்ட் வாட்டர், மினரல்ஸ் & மெட்டல், ஆலைகள், டேட்டா செண்டர்கள், பாதுகாப்பு துறை, பவர் செக்டார், ஹைட்ரோகார்பன், ஆஃப்ஸ்ஷோர உள்ளிட்ட பல துறை சார்ந்த, 3,63,448 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. இதில் சர்வதேச ஆர்டர்கள் 28% அதிகரித்துள்ளது.
இன்றைய பங்கு விலை?
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் 1.75% குறைந்து, 1751.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1780.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1741.90 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2078.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1456.35 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
L&T reported net profit grows 45% to Rs.1702 crore
L&T reported net profit grows 45% to Rs.1702 crore/பட்டையை கிளப்பிய எல் & டி.. ஜூன் காலாண்டில் 45% லாபம் அதிகரிப்பு..!