சென்னை: கஞ்சா விற்பனையை தடுக்க முன்னெச்சரிக்கையாக 1,000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,450 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.