தமிழகம் மற்றும் புதுவையில் அதிக வரி செலுத்தியவர் என்ற வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் வருமானவரித்துறை விருது அளித்தது. இந்த விருதை ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் பாலிவுட்டில் அதிக வரி செலுத்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் அக்ஷய்குமார் பெற்றார் என்பதும் அவருக்கும் இதே போன்ற விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ட்விட்டரில் உள்ள பயனர்கள் அம்பானி, அதானியை விட ரஜினிகாந்த் அக்ஷய்குமார் அதிக வரி செலுத்தி விட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.
வருமான வரி தினம்
ஜூலை 24 அன்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டபோது, நாடு முழுவதும் உள்ள அதிக வரி செலுத்தும் ஒரு சில தனிநபர்கள் வருமான வரித்துறையால் விருது வழங்கி கொண்டாடப்பட்டனர்.
விருது
அந்த வகையில் அதிக வரி செலுத்தியதற்காக பாராட்டு பெற்ற நட்சத்திரங்களாக ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் கொண்டாடப்பட்டனர் என்பதும், அவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் – அக்ஷய் குமார்
தமிழகத்திலேயே அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்தும், பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாரும் வருமான வரித்துறையால் அதிக வரி செலுத்துபவர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
ட்விட்டர் பயனர்கள்
இதுகுறித்து ஒரு ட்விட்டர் பயனர், ‘ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நிறைய பணம் சம்பாதிப்பதால், அவர்கள் சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்யவில்லை என்பதை நாம் கொண்டாட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் பயனர், ‘அவர்கள் அதிக பணம் சம்பாதித்தால் நிச்சயமாக அதிக வரி செலுத்தி தான் ஆக வேண்டும். எக்காரணம் கொண்டும் யாரும் கூடுதல் வரி செலுத்தப் போவதில்லை என்றார்.
அம்பானி-அதானி
உண்மையில், அம்பானி மற்றும் அதானி போன்ற தொழில் அதிபர்களை விட அக்ஷய் குமார், ரஜினிகாந்த் ஆகியோர் அதிக வரி செலுத்திவிட்டார்களா? என்று ட்விட்டரில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மை என்ன?
உண்மையில் தமிழகம், புதுவையை பொருத்தவரை ரஜினிகாந்த் அதிக வரி செலுத்திய நபராகவும், பாலிவுட் திரையுலகை பொருத்தவரை அக்ஷய் குமார் அதிக வரி செலுத்திய நபராகவும் கருதப்படுகிறார் என்றும், இதற்காக வருமான வரித்துறை சினிமாக்காரர்களுக்கு மட்டும் விருது வழங்கி கொண்டாட தேவையில்லை என்றும் மேலும் ட்விட்டர் பயனாளி தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கள்
ஆனால் அதே நேரத்தில் அதிக வரி செலுத்திய அக்ஷய் குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Akshay Kumar and Rajinikanth Becomes Highest Tax Payer In India More Than Ambani and Adani?
Akshay Kumar and Rajinikanth Becomes Highest Tax Payer In India More Than Ambani and Adani? | அம்பானி, அதானி-யை விட அதிகம் வரி செலுத்திய ரஜினி, அக்ஷய் குமார்?